fbpx

’உங்களால் சேற்றில் நடக்க முடியாதா’..? ’அப்புறம் எதுக்கு இங்க வர்றீங்க’..? வயநாட்டில் ராகுலின் காரை வழிமறித்து சரமாரி கேள்வி..!!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்பி ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் நேரில் சென்று பார்வையிட்டார். அதே வேளையில் ராகுல் காந்தியின் காரை மறித்து அங்குள்ளவர்கள் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, ராகுல் காந்தி காரில் அமர்ந்து பயணித்தபோது ஒருவர் பின்னால் இருந்து ஓடி வருகிறார். அண்ணே அண்ணே.. காரை நிறுத்த சொல்லுங்க என கூச்சலிட்டபடி வருகிறார். இதையடுத்து, ஓட்டுநர் காரை நிறுத்துகிறார். அப்போது அந்த நபர், “அவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தவர்கள் நாங்கள் தான். அவர் இங்கு எம்பியாக இருந்தவர். காரை விட்டு இறங்கி சேற்றில் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் இங்கு ஏன் அவர் வர வேண்டும்..? கீழே இறங்காமல் காரில் இருந்தபடி பார்க்க என்ன இருக்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, ராகுல் காந்தி அமைதியாக அந்த நபரை பார்த்தபடி காரில் உட்கார்ந்து இருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. அதேபோல் மற்றொருவர், ”நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம். இப்போது ராகுலின் வருகையால் நாங்கள் மணிக்கணக்கில் பசியுடன் உள்ளோம். விஐபி என்ற வகையில் அவரது வருகைக்காக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் கொண்டு வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

Read More : இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

English Summary

A video of people arguing over Rahul Gandhi’s car is going viral on the internet.

Chella

Next Post

பெற்றோர்களே அலட்சியமா இருக்காதீங்க..!! தொண்டைக்குள் சிக்கி மூச்சுத்திணறல்..!! 8 மாத ஆண் குழந்தை பரிதாப பலி..!!

Sun Aug 4 , 2024
An 8-month-old boy tragically died after a small ball got stuck in his throat.

You May Like