fbpx

அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகள் ரத்து…3 வழக்குகளையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது…

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது , அனுமதியின்றி கட்சி அலுகம் திறந்தது என 3 வழக்குகள் அதிமுக சார்பில்  போடப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 மனுவில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்துடனே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.  மனு மீதான விரணை நீதிபதி இளந்திரையன் முன்பு  வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் வாதிடுகையில் …. ’’நீட் தேர்வுக்கு எதிராக போராடியது என்பது ஜனநாயக ரீதியிலானது . அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தின. என்றார் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கு வேட்பாளர்கள் பயன்படுத்தியது எனவும் . இது பற்றி மனுதாரருக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டார்.  வாதங்களை கேட்ட பின் நீதிபதி இளந்திரையன் 3 வழக்குகளையும் ரத்து செய்தார்.

Next Post

வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை.... திருப்பதியில் கொடூர சம்பவம்..!

Tue Sep 6 , 2022
ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி ரெட்டியம்மா (26). இவர்களுக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. 6 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் ரெட்டியம்மா திருப்பதியில் வாடகை வீட்டில் தங்கி கொண்டு திருமலையில் இருக்கும் ஓட்டலில் வேலை செய்து வந்தார். ரெட்டியம்மாவின் மகன் அவரது தங்கை லட்சுமியம்மாவின் வீட்டில் தங்கி அங்கிருக்கும் பள்ளியில் படித்து […]

You May Like