பெண் கான்ஸ்டபிளுடன் ஹோட்டலில் பிடிபட்ட, துணைக் கண்காணிப்பாளர் கிருபா சங்கர் கண்ணுஜியாவை கான்ஸ்டபிள் நிலைக்கு மாற்றியுள்ளதாக உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் டி.எஸ்.பி. கிருபா சங்கர். இவர் 2021 ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுப்பு எடுத்தார். ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு வராமல், கான்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உடன் இருந்துள்ளார். அவரது சொந்த மற்றும் அலுவலக மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். தனது கணவனின் போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்ததால் அச்சமடைந்த அவரது மனைவி அவரை காணவில்லை என்று உன்னாவ் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி. கிருபா சங்கரின் மொபைல் நெட்ஒர்க்கை சோதித்த போது கான்பூர் ஓட்டலில் அவரது நெட்ஒர்க் கடைசியாக செயலிழந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். உடனே கான்பூர் ஓட்டலுக்கு விரைந்த காவல்துறையினர் ஒரே அறையில் இருந்த டி.எஸ்.பி. மற்றும் பெண் கான்ஸ்டபிளை கையும் களவுமாக பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உத்தரபிரதேச அரசு, 3 ஆண்டுகலுக்கு பிறகு டி.எஸ்.பி. கிருபா சங்கரை கான்ஸ்டபிளாக பதவி இறக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. ADG நிர்வாகம் உடனடியாக இந்த முடிவை செயல்படுத்த ஒரு உத்தரவை வெளியிட்டது.
Read more ; சாட்டை சுற்றிய அண்ணாமலை…! இரண்டு பாஜக மாவட்ட தலைவர்கள் அதிரடி நீக்கம்…!