fbpx

இன்று வெளியாகும் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. எப்படி தெரிந்துகொள்வது..?

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

2021- 22 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதே போல் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 26 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் குறைந்தபட்சம் 30% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று இடை நிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்தது. நாடு முழுவதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் எழுதினர். அதில் 10 ஆம் வகுப்பு தேர்வினை 21 லட்சம் பேரும், 12 ஆம் வகுப்பு தேர்வினை 14 லட்சம் பேரும் எழுதினர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று தேதி வெளியாகும் என்றும் மத்திய கல்வி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 10 ஆம் வகுப்பிற்கு ஜூலை 4 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூலை 12 ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்கள் முடிவுகளை Digilocker செயலி மற்றும் digilocker.gov.in  என்னும் இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். இது தவிர, மாணவர்கள் தங்கள் முடிவுகளை cbse.gov.in மற்றும் cbresults.nic.in ஆகிய அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் , ரோல் எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மொபைல் மற்றும் மின்னஞ்சல் ஐடிகளில் எஸ்எம்எஸ் மூலம் தங்கள் முடிவுகளை பெறலாம்..

DigiLocker இணையதளத்தில் எப்படி முடிவுகளை தெரிந்து கொள்வது..?

  • DigiLocker வலைத்தளத்தைப் பார்வையிடவும் – http://www.digilocker.gov.in – அல்லது உங்கள் ஸ்மார்ட்போனில் DigiLocker பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
  • படி 2: CBSE என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • படி 3: 10 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது 10 ஆம் வகுப்பு மதிப்பெண் தாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  • 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை (எது தேவையோ அது) தேர்ந்தெடுக்கவும்.
  • படி 4: CBSE பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் கணக்கில் உள்நுழைந்து உங்கள் மதிப்பெண் பட்டியலை அணுகவும்.
  • படி 5: மாற்றாக, உங்கள் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
  • படி 6: அதை பதிவிறக்கம் செய்து, எதிர்கால குறிப்புக்காக மதிப்பெண் பட்டியல் மற்றும் பிற சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

Maha

Next Post

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்.. அதை எப்படி தடுப்பது..?

Mon Jul 4 , 2022
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோய் திடீரென வராது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே நீண்ட காலமாக இதற்கான அறிகுறிகள் உள்ளன. குறிப்பாக தாகம், சோர்வு, திடீர் எடை இழப்பு, அதிகரித்த பசியின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் நீரிழிவு நோய் வருவதற்கு முன்பே உணரப்படுகின்றன. நீரிழிவு நோயின் அறிகுறிகளை கண்டறிந்த உடன், உடனடியாக உங்களை நீங்களே பரிசோதனை […]

You May Like