குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவரது மகனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்தார். இந்நிலையில், அந்த இளம்பெண் ராஜ்கோட் சைபர் கிரைம் போலீசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தன்னுடைய கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் இணைந்து தன்னை ஆபாச படங்களில் நடிக்க வற்புறுத்துவதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, திருமணமான பிறகு அந்த இளம்பெண் கருத்தரித்தார். அப்போது அவரை நிர்வாணமாக ஃபோட்டோ எடுக்குமாறு கணவருக்கு அவரது தந்தையே அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை கட்டாயப்படுத்தி வீடியோ மற்றும் ஃபோட்டோக்களை எடுத்துள்ளனர். இதற்கு கணவரின் தாயாரும் உடந்தையாக செயல்பட்டுள்ளார். மேலும், இதற்கு ஒத்துழைக்காவிட்டால், கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். மேலும், அந்த பெண்ணின் அறையில் அவரது மாமனார் சிசிடிவி பொருத்தியுள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், அதற்கு மறுப்பு தெரிவித்து கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் நாம் இங்கு இருவரும் உறவு கொள்வதை தனது தந்தை அவரது அறையில் பொருத்தியுள்ள டிவி மூலம் பார்த்து ரசிப்பார் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட அந்த இளம்பெண் ஆடிப்போனார். இந்நிலையில், அந்த பெண்ணின் நிர்வாண படங்களையும், வீடியோக்களையும் ஆபாச தளத்தில் பதிவிட்டால் ஏராளமான பணம் கிடைக்கும் என்று, அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அதன்படி, அந்த பெண்ணின் கணவரும், மாமனாரும் இணைந்து இளம்பெண்ணை மிரட்டி நடிக்க வைத்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அந்த குடும்பத்திடம் இருந்து தப்பித்து வந்த இளம்பெண், தனது குடும்பத்தினரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.