உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது.
இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பங்கஜ் மித்தல் நியமனத்தை அறிவித்தார். அதேபோல பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பி வி சஞ்சய் குமார், பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா; மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மனோஜ் மிஸ்ரா உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்வதாக அறிவித்துள்ளார்.