fbpx

பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் மதம் கட்டாயம் : உள்துறை அமைச்சகம்

குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு, இறப்புச் சட்டத் திருத்தத்தின் மாதிரி விதிகளின் படி, இதுவரை குடும்பத்தின் மதம் மட்டுமே பிறப்பு பதிவு ஆவணத்தில் பதிவான நிலையில், பிறப்பு பதிவுக்கான படிவம் 1-ல் சில திருத்தங்களுடன் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, குழந்தையின் தாயின் மதம், தந்தையின் மதம் என இரண்டு கேள்விகள் சேர்க்கப்பட்டு அதன் நேரெதிரில் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கும். குழந்தையை தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இது பொருந்தும்.

பிறப்பைப் பதிவு செய்யும் ஆவணத்தில் குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவது மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது என்று கூறப்படுகிறது. பிறப்புப் பதிவேட்டில் சட்ட தகவல், புள்ளிவிவர தகவல் என இருவேறு தகவல்கள் அமைந்திருக்கும். அதில் பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காகவே பெறப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியாக பார்த்தால் பிறப்புப் பதிவேட்டில் இனி பெற்றோரின் ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி இருப்பின் அதையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகவரிப் பெட்டியில் மாநிலம், மாவட்டம், டவுன் அல்லது கிராமம், வார்டு எண், பின்கோடு ஆகியன சேர்க்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

Lok Sabha | தேர்தலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை..? வாக்காளர்களே மறந்துறாதீங்க..!!

Fri Apr 5 , 2024
தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி தேர்தல்களில் வாக்களிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், இந்திய பாஸ்போர்ட் உட்பட 12 அடையாள அட்டைகளில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்கள் : முக்கியமாக, தேர்தலில் வாக்களிக்க பூத் ஸ்லிப்பை அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாக கருத முடியாது என்று […]

You May Like