பொதுவாக ஒரு படத்தில் எத்தனை பேர் நடித்திருந்தாலும் குழந்தை நட்சத்திரங்களை யாரும் மறக்க மாட்டார்கள்.. தங்களின் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து விடுவார்கள். இந்த குழந்தை நட்சத்திரங்கள் ஒரு சில ஆண்டுகளில் என்ன ஆகிறார்கள் என்றே தெரியாமல் போய் விடுகிறது. அந்த வகையில், அனைவரால் விரும்பப்பட்ட குழந்தை நட்சத்திரம் தான் பொம்மி.
ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ‘பொம்மி’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குழந்தையை கட்டாயம் யாரும் மறந்திருக்க முடியாது. தனது கள்ளக்கபடம் இல்லாத தனது சிரிப்பால், ரசிகர்களை தன பக்கம் ஈர்த்த பொம்மி, படத்தில் சிறிது நேரமே திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார், பொம்மியாக நடித்த பிரகர்ஷிதா.
பிரகர்ஷிதா, சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் சாமியாகவும் நடித்துள்ளார். நாடகங்களில் நடித்து கொண்டே தனது கல்வியையும் தொடர்ந்த இவர் பி எஸ் சீ எலக்ட்ரானிக் மீடியா படித்துத்துள்ளார். நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் இருக்கும் இவர், இப்போது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார் என ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி இருப்பது உண்டு.
பொம்மிக்கு திருமணம் முடிந்து தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், பொம்மியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும், பொம்மியின் போட்டோக்கடிளை பார்த்த ரசிர்கள், மீண்டும் நடிக்க போறீங்களா என கேட்டு வருகின்றனர்.
Read more ; பெண்கள் சகவாசம்..! கெட்ட பழக்கம்..! நடிகர் முரளி குறித்து பிரபலம் சொன்ன சீக்ரெட்ஸ்…!