fbpx

Viral Video | இரண்டு வருடமா வேறொரு பெண்ணுடன் உல்லாசம்.. கணவனுக்கு மனைவி கொடுத்த விசித்திரமான தண்டனை..!!

திருமணத்தை மதிப்பது கணவன், மனைவி இருவரின் கடமை. ஆனால் சில ஆண்கள், ‘மனைவி மட்டும் திருமண எல்லைக்குள் வாழவேண்டும். தனக்கு நல்ல வாரிசுகளை உருவாக்கி தரவேண்டும். அவள் தனது சமூக அந்தஸ்து குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் தான் மட்டும் எல்லைகளை மீறி எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கை நடத்துவேன்’ என்ற கருத்தோடு செயல்படுகிறார்கள்.

மனைவிக்கு தெரியாது என்று ரகசிய உறவை தொடர்கிறவர் களில் பெரும்பாலானவர்களின் மர்ம வாழ்க்கை, மனைவிகளுக்கு தெரியத்தான் செய்கின்றன. சிலர் தெரிந்தும், வேறுவழி இல்லாமல் திருமண வாழ்க்கையை விட்டு வெளியே வர இயலாமல் தவிக் கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவர்கள் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாத போன்ற விரக்தியுடன் நாட்களை நகர்த்துகிறார்கள். வீட்டுக்கு வெளியே சிரித்துக் கொண்டு, உள்ளே அழுதுகொண்டிருக்கிறார்கள்.

இப்படியான சூழலில், தனது கணவனின் தகாத உறவு தெரியவந்ததையடுத்து மனைவி கொடுத்த தண்டனை இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்துள்ளது. கணவருக்கு இரண்டு வருடங்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, “ எனக்கு இரண்டு வருடங்களாக தொடர்பு இருந்தது. அது எப்படி இருந்தது என்று என்னிடம் கேளுங்கள்” என எழுதிய பதாகையொன்றை கணவனின் கழுத்தில் மாட்டி விட்டு நியூயார்க் நகரில் உள்ள வால்ட் வைட்மேன் என்ற வணிக வளாகத்தில் நடக்க வைத்துள்ளார்.

அத்துடன் அப்பெண்ணும் “ ​இந்த மனிதனுக்கு இரண்டு வருடங்களாக தகாத உறவு இருந்துள்ளது என கூச்சலிட்டுக்கொண்டு முன்னால் நடந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு  ஒரு குழந்தை இருப்பதாகவும், குறித்த பெண் இரண்டாவது முறையாக  கர்ப்பமாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை 5 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளதுடன் பலரும்  இந்த தண்டனையை விமர்சித்துள்ளனர்

https://twitter.com/i/status/1860128484343050424

Read more ; பொது மக்களின் மனுக்களுக்கு 3 நாளில் ஒப்புதல்…! அரசு அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு…!

English Summary

Cheating husband walks through mall wearing ‘I had affair’ sign as wife looks on. Watch

Next Post

திடீரென குலுங்கிய ஜம்மு காஷ்மீர்.. வீதிக்கு ஓடிய பொதுமக்கள்..!! நிலநடுக்கத்தால் பீதி

Thu Nov 28 , 2024
Earthquake tremors felt in Jammu and Kashmir, epicentre in Afghanistan

You May Like