fbpx

சுதந்திர தின விழா….! மூவர்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையம்…..!

இன்று நாடு முழுவதும் இந்திய சுதந்திரதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து, நாட்டின் பல்வேறு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் என்று, பல பகுதிகளிலும், பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இந்த சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதத்தில், சென்னை விமான நிலையம் முழுவதும், மூவரண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மிகப் பிரமாண்டமாக காட்சி தருகிறது.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர், இரவில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சென்னை விமான நிலையத்தை பார்த்து வியந்தவாறு, புகைப்படங்களை எடுத்துக் கொண்டு செல்கிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று வரையில், ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கே, 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதோடு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Post

நீண்ட காலமாக தீர்க்கப்படாத குடிநீர் பிரச்சனை..!! 12 கவுன்சிலர்கள் திடீர் ராஜினாமா..? பரபரப்பில் ராமநாதபுரம்..!!

Tue Aug 15 , 2023
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சிக்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 9 கிராமங்கள் உள்ளன. அதன்படி தொட்டியாப்பட்டி, ஆண்டிச்சிகுளம், சிக்கல், டொட்டப்பல்சேரி, மதினார் நகர், கழநீர் மங்கலம், இ.சி.ஆர் காலனி உட்பட 9 கிராமங்களில் சுமார் 13,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் ஒரு வருடமாக காவிரி கூட்டுக்குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஒரு குடம் […]

You May Like