fbpx

தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டத்தில் கனமழை…? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13 முதல் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களை பொறுத்தவரையில் எந்த எச்சரிக்கையும் கிடையாது, வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

டீயை மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

Thu Oct 12 , 2023
பலரின் வாழ்கையில் முக்கிய பங்கு வகிப்பது டீ. ஆம், சந்தோசம், துக்கம், பசி என்று பல உணர்வுகளின் போது நாம் டீ குடிப்பது உண்டு. பொதுவாக டீயை அமைதியாய் உட்கார்ந்து குடிக்கும் போது ஒரு வகையான மன நிம்மதி கிடைப்பது போல் தோன்றும். அதே சமயம், அவசரமான காலை நேரங்களில் பலருக்கு உணவும் இந்த டீ தான். ஆனால் காலையில் பிள்ளைகள் மற்றும் கணவரை வீட்டில் இருந்து பள்ளிக்கும் அலுவலகத்திற்கும் […]

You May Like