fbpx

40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்…! மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை…!

மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 24 முதல் 26-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.

Vignesh

Next Post

#Loan: மாணவர்களே உயர்‌ கல்வி படிக்க கல்விக்கடன்‌...! விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு...! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க...!

Fri Sep 23 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உயர்‌ கல்வி பயில கல்விக்கடன்‌ பெறுவதற்கு மாணாக்கர்கள்‌ எவ்வித தயக்கமும்‌ இன்றி தங்களது வங்கி மேலாளரை அணுகி பயன்‌ பெறலாம்‌. இதுகுறித்துமாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம் தனது செய்தி குறிப்பில் மாணவ, மாணவிகள்‌ படிப்பதற்கு கல்விக்‌ கட்டணம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்ற நோக்கில்‌ உயர்‌ கல்வியைத்‌ தொடர, கல்விக்‌ கடன்‌ முனைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வங்கிகள்‌ மூலமாக கல்விக்‌ கடனுக்கு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டு வருகிறது. அந்த […]

You May Like