fbpx

அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் மிதமான மழை…! வானிலை ஆய்வு மையம் தகவல்…!

தென் தமிழக மாவட்டங்களில் 12-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 12-ம் தேதி வரை தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும். 13-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க கூடும். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை. வழக்கம் போல கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம்.

Vignesh

Next Post

நாடாளுமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! சம்பளம் ரூ.1.77 லட்சம் வரை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Fri Mar 10 , 2023
இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 10 சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில், குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் […]

You May Like