fbpx

பயங்கர அலர்ட்…! 65 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று…! இந்த 10 மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை…!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை – திரிகோண மலையில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 670 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 880 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.

இது இன்று மாலை வரை மேற்கு – வடமேற்கு திசையிலும், அதன் பிறகு மேற்கு – தென்மேற்கு திசையிலும் நகர்ந்து நாளை காலை இலங்கை கடற் பகுதிகளை கடக்க கூடும். இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், உள் தமிழ்நாட்டு மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிரட்டும் ’மாண்டஸ்’ புயல்..!! மிரண்டுபோன வானிலை மையம்..!! BIG WARNING..!!

நாளை தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழ்நாட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். முக்கியமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வரும் 2-ம் தேதி, தென்தமிழக மாவட்டங்களின் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 3-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் 3-ம் தேதி வரை இலங்கை மற்றும் தமிழ்நாட்டு கடலோர பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உங்க வாகனத்தின் மீது எவ்வளவு அபராத தொகை இருக்கிறது...? ஆன்லைன் மூலம் நீங்களே பார்க்கலாம்...!

Tue Jan 31 , 2023
தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது என்ற முழுமையான செயல்முறை விவரம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்கள் இ-சலான் வைத்து ஆன்லைனிலும் […]

You May Like