சென்னை அயனாவரம் பகுதியில் இருக்கும் ஒரு பெண் அதே பகுதியில் பல ஆண்டு காலமாக பூ வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த மூன்றாம் தேதி அண்ணா நகரில் உள்ள புது மண்டபம் ரோடு வழியே நடந்து சென்றார்.
அப்பொழுது ஒரு நபர் அந்த பூக்கார பெண்ணை வழிமறித்து மிகவும் ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். போதையில் இருந்த அந்த முதியவரை கீழே தள்ளிவிட்டு பெண் தப்பிச் செல்ல முயற்சித்தார்.
அப்பொழுது முதியவர் கீழே கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் அடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதனால், அடிபட்ட பெண் வலி தாங்காமல் அலறி அடிக்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரித்த நிலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் அண்ணா நகர் கிழக்கு பகுதியில் வசித்து வரும் 62 வயதான கரிகாலன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, போலீசார் கரிகாலனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.