Chicken pox: கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பொதுமக்களுக்கு அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு தட்டம்மை, சின்னம்மை போன்ற வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குகிறது.
அந்த வகையில் இந்தாண்டும் வைரஸின் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இளம் வயதில் வேரிசெல்லா சோஸ்டர் வைரஸின் தொற்றால் ஏற்படுவது சிக்கன் பாக்ஸ் எனும் சின்னம்மை ஆகும். இதை கொப்புளிப்பான் அம்மை என்று அழைக்கிறோம்.
உடல் முழுவதும் எந்த பாரபட்சமுமின்றி கொப்புளம் கொப்புளமாக ஏற்படும் அம்மை இது. கிட்டத்தட்ட நம் அனைவருக்குமே குழந்தையாக இருக்கும் போது ஒருமுறையும் மேனிலைப் பள்ளி வகுப்புகளில் அல்லது கல்லூரி காலங்களில் மறுமுறை சின்னம்மை தொற்று ஏற்படலாம். சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் நீர் கட்டியை போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்து காணப்படும்.
கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும். எனவே பொதுமக்கள் வெயில் காலத்தில் இந்த நோய்களில் இருந்து தங்களை காக்க மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். வெரிசெல்லா வைரஸ் உடலில் நுழைந்த 2 வாரங்களுக்கு பின்னர் சின்னம்மை உருவாகிறது.அதன் பின்னர் 10 நாட்கள் வரை சின்னம்மை நோயின் தாக்கம் இருக்கும்.
சின்னம்மை அறிகுறிகள்: காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, கை,கால் வலி, உடலில் அரிப்பை உண்டாக்கும் கொப்பளங்கள், சின்னம்மை பாதித்தவர்களின் சளி,இருமல்,எச்சில் மூலம் பிறருக்கு வைரஸ் தொற்று பாதிக்கும் என்பதினால் இதில் கவனமாக இருப்பது அவசியம். சின்னம்மை பாதித்தவர்கள் உடலில் ஏற்பட்டிற்கும் கொப்பளங்களை உடைக்க கூடாது.அதனை தொடுவதை முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
வேப்பிலைகளை அரைத்து நீரில் கலந்து சோப் இன்றி குளிக்கவும்.பின்னர் வேப்பிலையை பரப்பி அதன் மேல் படுக்கவும். சின்னம்மை பாதித்தவர்கள் துணிகளை வெந்நீரில் ஊறவைத்து வெயிலில் நன்றாக காயவைத்து உடுத்த வேண்டும். வாழைப்பழம், இளநீர், நுங்கு போன்ற பொருட்களை சாப்பிடுவது நல்லது. மோர்,எலுமிச்சை சாறு அருந்துவது நல்லது.வேப்பிலையை கொதிக்க வைத்து குடித்து வந்தால் தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.கடுகு மற்றும் புளி சேர்த்த உணவுகளை சின்னம்மை சரியாகும் வரை எடுத்து கொள்ள வேண்டாம்.
Readmore: