fbpx

ரெடியா…? ஜுலை 1 முதல் 25 வரை முதலமைச்சர்‌ கோப்பை..! தங்குமிடம்+ உணவு இலவசம்…! முழு விவரம்

44வது செஸ்‌ ஒலிம்பியாட்‌ போட்டியின்‌ நிறைவு விழாவின்‌ போது தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகள்‌ கபடி, சிலம்பம்‌ உட்பட 15 விளையாட்டுகளில்‌ பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசுஊழியர்கள்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும்‌ என அறிவித்தார்கள்‌. அந்த வகையில்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ பிப்ரவரி 2023ம்‌ மாதம்‌ முதல்‌ வாரத்தில்‌ தொடங்கி மார்ச்‌ 2023ம்‌ மாதம்‌ முடிய நடைபெற்றது.

இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்திற்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌ வீராங்கனைகள்‌ கலந்து கொண்டனர்‌. மாவட்ட அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 27,000-க்கும்‌ மேற்பட்ட வீரர்‌ மற்றும்‌. வீராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌ சென்னையில்‌ 17 இடங்களில்‌ ஜுலை 01-ந்‌ தேதி முதல்‌ ஜுலை மாதம்‌ 25-ந் தேதி வரை முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடைபெறவுள்ளது.

இந்த போட்டிகளில்‌ பங்கேற்கவுள்ள 27,000க்கும்‌ மேற்பட்ட வீரர்‌-வீராங்கனைகள்‌,பயிற்றுநர்கள்‌, நடுவர்கள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ தேசிய மாணவர்‌ படை தன்னார்வலர்கள்‌ அனைவருக்கும்‌ போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும்‌ தங்குவதற்குஸவசதியாக தனியார்‌ விடுதிகள்‌ மற்றும்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை ஆகியவைகளில்‌ 2000க்கும்‌ மேற்பட்ட அறைகள்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌ மேலக்கோட்டையூரில்‌ உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகத்தில்‌ உள்ள மாணவ மாணவியர்‌ விடுதிகளில்‌ தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ போட்டி நடைபெறும்‌ அனைத்து நாட்களிலும்‌ மூன்று வேளை உணவு மற்றும்‌ சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும்‌

Vignesh

Next Post

தீவிர வயிற்றுப்போக்கு...! தொடர்ந்து 14 நாட்கள் இதை குடிக்க வேண்டும்...! இல்லை என்றால் ஆபத்து....

Sun Jun 25 , 2023
இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்‌ இன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; ஒவ்வொரு வருடமும்‌ “தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்‌” இரு வாரங்கள்‌ அனுசரிக்கப்படுகிறது. இம்முகாமின்‌ முக்கிய நோக்கமானது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கினால்‌ ஏற்படும்‌ மரணத்தை முற்றிலுமாக தவிர்த்தல்‌ ஆகும்‌. இவ்வருடம்‌ இம்முகாமானது இன்று மாலை வரை நடைபெறுகிறது. இம்முகாமில்‌ கிராம சுகாதார செவிலியர்கள்‌ மற்றும்‌ அங்கன்வாடி […]

You May Like