சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க இன்று காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து அழைப்புவிடுக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு, ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கருணாநிதி நூற்றாண்டையொட்டி, 1,000 படுக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் சென்னையில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இன்று அழைப்பு விடுக்க உள்ளார்.