fbpx

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..! என்ன காரணம்?

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் அடுத்த வாரம் பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசுமுறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..! என்ன காரணம்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதால், தற்போது அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் நலம் பெற்றவுடன் டெல்லி செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஜூலை 19ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சாமி கும்பிட வந்த சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பூசாரி செய்த காரியம்..! அதிர்ச்சி தகவல்

Thu Jul 14 , 2022
சாமி கும்பிட வந்த ஒன்பது வயது சிறுமியை கோயிலுக்குள் அழைத்து பாலியல் துன்புறுத்தல் செய்த கோயில் பூசாரி போக்சோவில் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே வல்லக்கடவு பகுதியில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பத்தனம்திட்டா மாவட்டம் ஆரன்முலா பகுதியைச் சேர்ந்த விபின் என்ற 32 வயது நபர் பூசாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாக விபின் வல்லக்கடவு பகுதியில் தங்கி அந்தக் கோயில் பூசாரியாக […]

You May Like