fbpx

பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் முக.ஸ்டாலின் வழக்கு..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த ரஃபேல் கடிகாரம் தொடர்பாக பாஜக-திமுகவினரிடையே மோதல் எழுந்தது. இதையடுத்து, ரஃபேல் கடிகாரத்தின் ரசீது எங்கே என்று திமுகவினர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, கடிகாரத்தின் பில் மற்றும் தனது சொத்து மதிப்போடு திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்கள் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி ‘DMK FILES’ என்ற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டார். அப்போது, தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் ஊழல் செய்து சொத்துக்கள் குவித்துள்ளதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியை பல தொலைக்காட்சிகள், இணையதளங்கள் நேரலை செய்திருந்தனர். அண்ணாமலை வெளியிட்ட அந்த சொத்து பட்டியலில், முதலமைச்சர் முக.ஸ்டாலின் தன்னுடைய குடும்பத்தினருடன் துபாய் சென்ற போது அங்குள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ததாகவும், தேர்தலின் போது அந்த நிறுவனங்களின் மூலமாக போது பணப்பரிமாற்றம் நடத்தப்பட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சார்பில், வழக்கறிஞர் ஜி. தேவராஜன் என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கோடை விடுமுறை கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், மனு மீதான விசாரணையை 8 வார காலத்துக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! தமிழ்நாடு முழுவதும் வந்தாச்சு புதிய நடைமுறை..!!

Wed May 10 , 2023
தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் அனைவரின் கைகளிலும் செல்போன் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகளை அனைவருமே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். டீ குடித்துவிட்டு ரூ.10 பணம் செலுத்த வேண்டும் என்றாலும் கூட கடைகளில் உள்ள QR code அட்டை மூலம் ஸ்கேன் செய்தே செலுத்துகின்றனர். குக்கிராமங்களில் கூட QR code அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி வந்துவிட்டது. ஆனாலும் கூட […]

You May Like