fbpx

2026 சட்டமன்ற தேர்தல்… 5 பேர் கொண்ட குழுவை அமைத்த திமுக தலைவர் ஸ்டாலின்…!

2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது. அந்த வகையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் மேற்கொள்ள வேண்டியமாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கட்சித் தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு தொடர் வெற்றி கிடைத்து வரும் நிலையில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும். கட்சி நிர்வாகிகள் அலட்சியம் காட்ட கூடாது, எதிர்க்கட்சிகளை பலவீனமாக கருதக் கூடாது என தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் .

English Summary

Chief Minister Stalin has ordered the formation of a 5-member committee to face the upcoming 2026 assembly elections.

Vignesh

Next Post

H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு... 4 வயது சிறுவன் உயிரிழப்பு...! இது தான் முக்கிய அறிகுறிகள்...!

Sun Jul 21 , 2024
H1N1 flu affects... 4-year-old boy dies

You May Like