மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகம் சென்று குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தார்..
கடந்த 12ஆம் தேதி கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், 14ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. ஸ்டாலினின் உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும், அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்தது..
மேலும் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.. அவர் கொரோனா பாதிப்பில் இருந்து விரைந்து குணமடைந்து வருகிறார் என்றும் கூறப்பட்டது… ஸ்டாலின் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது..
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. மருத்துவமனையில் நேராக தலைமை செயலகம் சென்ற அவர், குடியரசு தலைவர் தேர்தலில் தனது வாக்கினை செலுத்தினார்.. தலைமை செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் தனது வாக்கினை செலுத்தினார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் தனது வீட்டிற்கு திரும்பினார்..