அரியலூர் அருகே பூப்பறிக்கும் வேலைக்காக சென்ற ஒரு சிறுமியை 60 வயது முதியவரான கூலித் தொழிலாளி, மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொற்பதிந்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி (60). கூலித்தொழில் பார்த்து வரும் இவர், பூப்பறிக்கும் வேலைக்கு வந்த ஒரு சிறுமியை மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதன் காரணமாக, அந்த சிறுமி கர்பம் அடைந்தார். ஆகவே அந்த சிறுமியின் உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து, பெற்றோர் அந்த சிறுமியை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
அங்கே அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார் என்பதை உறுதி செய்தனர். அதன்பிறகு, அந்த சிறுமியிடம் இது பற்றி பெற்றோர்கள் தரப்பில் கேட்டபோது, அவரை முதியவர் காந்தி தன்னை பலாத்காரம் செய்ததாக கதறி அழுதபடி தெரிவித்துள்ளார். அதோடு, இது குறித்து வெளியே சொன்னால், உன்னை கொலை செய்து விடுவேன் என்று காந்தி மிரட்டியதாகவும் அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து, அந்த சிறுமியின் பெற்றோர், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவர் காந்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.