குழந்தை நட்சத்திரமாக ’செல்லோஷோ ’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்த சிறுவன் புற்று நோயால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தி திரைப்படமான ’ செல்லோ ஷோ ’ என்ற திரைப்படம் சிறந்த கதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 2023ம் ஆணடு தேர்வு செய்யப்பட உள்ள ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் முக்கிய குழந்தை நட்சத்திரமாகவும், 6 குழந்தைகளில் ஒருவராகவும் நடித்துள்ள ராகுல் கோலி என்பவர் புற்று நோயால் மரணம் அடைந்துள்ளார்.
சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது என்பது மிகவும் பெருமைகொள்ளத்தக்க ஒன்று. இப்படம் அக்டோபர் 14ல் திரைக்கு வெளிவர உள்ளது. இதில் நடித்த ராகுல் என்ற சிறுவன் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளான். தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல் நிலை தீவிரமாக மோசமாகி உயிரிழந்துள்ளான்.
அக்டோபர் 2ம் தேதி ராகுல் காலை உணவு சாப்பிட்ட பின்னர் ரத்த வாந்தி வந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். அப்போதே என்மகன் என்னை விட்டு பிரிந்ததாக நான் உணர்ந்தேன். என உருக்கமாக தெரிவித்துள்ளார்.