fbpx

’பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் இல்லை’..!! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தார். ஆனால், வயதான காலத்தில் தங்களைக் கவனிக்காமலும், மருத்துவச் செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்துப் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கைச் சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆஷா விசாரித்தார்.

’பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் இல்லை’..!! சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நகைகளை விற்றும், சேமிப்புகளைக் கரைத்தும், தங்கள் மருத்துவச் செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என தெரிவித்த நீதிபதி, கடந்த 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்குச் சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யப் பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டார். மேலும், தந்தை மகற்காற்றும் உதவி. என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொதுப் பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த விழுமியத்தின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.

Chella

Next Post

1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் கசிவு..!! ’உடனே இதை செய்யுங்க’..!! பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை..!!

Sat Oct 8 , 2022
1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் கசிந்ததாக பேஸ்புக் நிறுவனமான மெட்டா எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில், உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் செயலி மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, பேஸ்புக் நிறுவனமான மெட்டா, 1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் […]
1 மில்லியன் பயனர்களின் கடவுச்சொல் கசிவு..!! ’உடனே இதை செய்யுங்க’..!! பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை..!!

You May Like