மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக நாம் எவ்வளவு தோல்வி அடைந்திருக்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு. இத்தனை சிறு வயதிலேயே அரிவாளைக் கையில் எடுக்கும் அளவுக்கு, குழந்தைகள் மனதில் வன்முறை எண்ணம் தலைதூக்கியிருக்கிறது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம், அரசு என அனைவருமே பொறுப்பு தான்..
பள்ளி மாணவர்கள் தங்கள் சுற்றத்தாரையே முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு வளர்கின்றனர். கடுமையான குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்காமல், காவல்துறையின் கைகளை திமுக அரசு கட்டிப் போட்டிருக்கிறது. அரசே மது விற்பனை செய்வதாலும், போதைப்பொருள் புழக்கத்தாலும், தமிழ்ச் சமுதாயம் நிலைதடுமாறிக் கொண்டிருக்கிறது. இதனால், மாணவ சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கும் எதிர்விளைவுகளை முதலமைச்சர் முக.ஸ்டாலின் இனியாவது உணர வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தனியார் பள்ளி ஒன்றில், எட்டாம் வகுப்பு மாணவன், சக வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) April 15, 2025
தொடர்ச்சியாக பள்ளி மாணவர்களிடையே இது போன்ற வன்முறை கலாச்சாரம் தலையெடுத்திருப்பது, ஒரு சமூகமாக…
அத்தனை குழந்தைகளையும் ஆசிரியர்களால் கண்காணிப்பது என்பது இயலாதது. எனவே, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை கண்காணிப்பில் வைத்திருப்பது சமூகத்திற்கு நல்லது. சரியான வழியில் வளர்க்கப்படும் ஒவ்வொரு குழந்தையும், எதிர்காலத்தில் நூறு குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்கிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : ’இனி மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து’..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!