Electric car : டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக பிரபல சீனா நிறுவனமான BYD நிறுவனம், மலிவான விலையில் ரூ. 2 கோடி மதிப்பிலான Yangwang U9 எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
Tesla நிறுவனத்தின் கார்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பெரும் தலைவலியாக ஒரு சீன நிறுவனம் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் சீனாவை சேர்ந்த BYD நிறுவனத்திடம் நேரடியாக மோதுகிறது. BYD நிறுவனம் சீனாவில் தொடங்கப்பட்ட நிறுவனம் என்றாலும் இப்போது உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் EV கார்களை விற்பனை செய்துவருகிறது. இந்தியாவிலும் BYD நிறுவனம் பிரீமியம் எலக்ட்ரிக் கார் செக்மென்ட்டில் கார்களை விற்பனை செய்கின்றது.
டெஸ்லா கார்களை போல இல்லாமல் ஹைபிரிட் கார்களையும், Plug in hybrid கார்களையும் BEV நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தால் இப்போது டெஸ்லா மிகப்பெரிய பிரச்னையில் உள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் கார்களின் விலையை விட குறைந்த விலையில் இந்த BYD கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் டெஸ்லா நிறுவனத்திற்கு இணையாக BYD விற்பனை செய்துள்ளது. மார்ச் 2022 ஆம் ஆண்டு முதல் ICE வகை கார்களின் உற்பத்தியை நிறுத்திய BYD நிறுவனம் இப்போது முழு Hybrid, PHEV மற்றும் எலக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்கின்றது. இந்த நிறுவனம் புதுமையான ‘Blade Battery technology’ ஒன்றை உருவாக்கியது.
நுகர்வோர் மத்தியில் EVகள் மீதான ஆர்வம் குறைந்து வருவதால், உயர்நிலை சந்தையில் பெரும் பங்கைப் பிடிக்க BYD இன் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். 2024 ஆம் ஆண்டில் பல “உயர்ந்த சொகுசு” மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக BYD கூறியது. இந்தநிலையில், BYD நிறுவனம், மலிவான விலையில் Yangwang U9 என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.
BYD இன் படி, U9 ஆனது 309.19 கிமீ வேகத்தில் 192.12 மைல் கல்லை அடைய முடியும். மேலும் இது 2.36 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. 1.68 மில்லியன் யுவான் ($233,450) (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி) விலையில், Yangwang U9 விற்பனை செய்யப்படுகிறது. இது ஃபெராரி போன்ற நீண்டகாலமாக நிறுவப்பட்ட பிராண்டுகளால் தயாரிக்கப்படும் சூப்பர் கார்களுடன் ஒப்பிடத்தக்கது, அதன் ஹைப்ரிட் SF90 Stradale மாடல் 2.5 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை அடையும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 450 கிமீ வரை செல்லும் திறன் கொண்ட யாங்வாங் U9 ஆனது, வேகமான குளிர்ச்சி மற்றும் 500 கிலோவாட் வரை அதிவேகமாக சார்ஜ் செய்யும் வகையில் உள்ள-இன்-ஹவுஸ் பிளேட் பேட்டரி தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இரட்டை சார்ஜிங் துப்பாக்கிகள் வடிவில் இரட்டை சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவு உள்ளது, இது 10 நிமிடங்களில் 30% முதல் 80% வரை தள்ள உதவுகிறது.
1995 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த BYD நிறுவனம் முதல் முதலாக நிக்கல் கேட்மியம் பேட்டரி தயாரிப்பு நிறுவனமாக துவங்கப்பட்டது. BYD Auto மற்றும் BYD electronic என இரு பிரிவுகளாக அந்த நிறுவனம் உள்ளது. BYD Auto நிறுவனம் 2003 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் துவங்கப்பட்ட அதே ஆண்டு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவை மட்டுமே நம்பியிருந்த BYD இப்போது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுவருகிறது. இதை டெஸ்லா எப்படி எதிர்கொள்ளும் என்று என்பதை பார்க்கலாம்.
English Summary : Competing with Tesla, the famous Chinese company BYD has launched a cheap price of Rs. 2 Crore Yangwang U9 electric car has been launched.
Readmore: கூகுள் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டின் 6 புதிய வசதிகள்.! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை.!