fbpx

அட கடவுளே… எரிவாயு விலை 3 ரூபாய் உயர்வு…! காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு…!

இயற்கை எரிவாயு விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை ஏற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.இயற்கை எரிவாயு டெல்லியில் ஒரு கிலோ ரூ. 78.61 ஆகவும், நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காசியாபாத்தில் ஒரு கிலோ ரூ. 81.17 ஆகவும், குருகிராமில் ரூ. 86.94 ஆகவும் கிடைக்கும். அக்டோபர் 3 ஆம் தேதி, இயற்கை எரிவாயு விலைகள் 8 முதல் 12 ரூபாய் வரை உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இயற்கை எரிவாயு விலை வரலாறு காணாத அளவுக்கு 40% சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இயற்கை எரிவாயு, மற்றும் சமையல் எரிவாயு விலை உயர வாய்ப்புள்ளதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிக்கவும், உரம் தயாரிக்கவும், சிஎன்ஜியாக மாற்றப்பட்டு ஆட்டோமொபைல்களுக்கு சக்தி அளிக்கவும் மற்றும் சமையல் நோக்கங்களுக்காக வீட்டு சமையலறைகளுக்கு குழாய் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்த எரிவாயு கடந்த ஒரு வருடத்தில் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது,

Vignesh

Next Post

#Tngovt: ரேஷன் கார்டில் பெயர்களை மாற்றம் செய்ய வேண்டுமா...? உங்களுக்கான அறிய வாய்ப்பு... தவிர விடாதீங்க...

Sat Oct 8 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து வட்டாட்சியர்‌ அலுவலகங்களிலும்‌ இன்று பொது விநியோகத்‌ திட்டம்‌ தொடர்பான குறைதீர்‌ முகாம்‌ நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ பொது விநியோகத்‌ திட்டத்தின்‌ சேவைகளை அனைத்து தரப்புமக்களுக்கும்‌ கிடைக்கும்‌ பொருட்டு, ஒவ்வொரு மாதமும்‌ இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள்‌ வாரியாக மக்கள்‌ குறைதீர்‌ முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஒவ்வொரு வட்டாட்சியர்‌ அலுவலகத்திலும்‌ நடைபெறும்‌ குறைதீர்‌ முகாமில்‌ […]

You May Like