fbpx

சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும்…! யாரெல்லாம் இதற்கு தகுதி…? முழு விவரம்

சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி ( Common Law Admission Test) க்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது நிரம்பிய பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் மற்றும் நடப்பாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரடியாகவும் நடைபெறும்.

இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத்தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common Law Admission Test) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட தேர்வுகளான, நேர்காணல் (Interview), குழு விவாதம் (Group Discussion), எழுத்துத் தேர்வு (Written Ability Test) ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.

மேற்கண்ட தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி பெற Www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Vignesh

Next Post

மத்திய சிறையில் குற்றவாளிகளுக்கு மத உரிமைகளுக்கு மறுப்பு...? சிறைத்துறை கொடுத்த விளக்கம்...!

Mon Oct 16 , 2023
வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளின் மத உரிமைகள் மறுக்கப்படுவதாக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் ஆதாரமற்ற மற்றும் விஷமத்தனமான குற்றச்சாட்டு என சிறைத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்; வேலூர் மத்தியசிறை உட்பட தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த சிறைவாசிகளும் எவ்வித சிரமுமின்றி தங்கள் மத வழிபாட்டைத் தொடரும் வகையில் சமமான மத […]

You May Like