Cocaine: நாட்டில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஒரே வாரத்தில் டெல்லியில் மட்டும் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தலைநகர் டெல்லியில் கடந்த வாரம் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 562 கிலோ கோகைன் போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், டெல்லி ரமேஷ்நகர் பகுதியில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலை அடுத்து, நேற்று அங்கு சென்ற டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர், 200 கிலோ கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 2,000 கோடி ரூபாய். ஜி.பி.எஸ்., கருவியின் உதவியுடன் கடத்தல் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபரை கைது செய்ய முயன்றனர். இருப்பினும், அந்த நபர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. ஒரே வாரத்தில் டெல்லியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Readmore: நவராத்திரி 9ம் நாள்!. சரஸ்வதி, ஆயுத பூஜை நாளில் அறிந்துகொள்ள வேண்டிய சிறப்புகள்!.