fbpx

இவரை நியமித்த நேரம், தலைகீழாக மாறிய காக்னிசண்ட் நிறுவனம்??

Cognizant நிறுவனம் வேகமாக வளர்ந்து வந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு முதல் வர்த்தகம், நிர்வாகம் என அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார் ரவிக்குமார்.

ரவிக்குமார் இன்போசிஸ் நிறுவனத்தில் 2022 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறிய முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். காக்னிசன்ட் நிறுவனத்திற்கு வந்த சில நாட்களிலேயே சிஇஓ பதவி பெற்று தனது ஸ்டைலில் நிர்வாக குழுவை மாற்றி அமைத்தார். இப்பதவியில் முன்பு இருந்த பிரையன் ஹம்ப்ரிஸ் வெளியேறியுள்ளனர். இவரை தொடர்ந்து சமீபத்தில் உலக வளர்ச்சி சந்தைகளுக்கான காக்னிசண்ட் தலைவர் ராப் வாக்கர் வெளியேறினார்.

ராப் வாக்கர் 2021 ஆம் ஆண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் UK மற்றும் அயர்லாந்து வணிகத்தின் நிர்வாக தலைவராக சேர்ந்தார், ஆனால் கடந்த 2 வருடத்தில் அமெரிக்க வர்த்தகத்தை தவிர அனைத்து சந்தைகளின் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்தார்.

ராப் வாக்கர்-ஐ தொடர்ந்து உத்தி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக துணை தலைவராக இருந்த அனில் செரியன் சமீபத்தில் வெளியேறியவர்களில் மிகவும் முக்கியமானவர். காக்னிசன்ட் நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதியின் தொழில்நுட்ப மாற்ற சேவை பிரிவின் பொறுப்பில் இருந்தார். இவரை தொடர்ந்து காக்னிசன்ட்-ன் chief administrative officer ஆக இருந்த லாரன்ஸ் வைசர் வெறும் மூன்று வருட பணிக்குப் பிறகு ராஜினாமா செய்தனர். குளோபல் டெலிவரி தலைவராக இருந்த Andy Stafford தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Maha

Next Post

மகளை பலாத்காரம் செய்த இளைஞரை உருட்டுக் கட்டையால் அடித்தே கொன்ற தந்தை..!

Mon Jul 31 , 2023
ஒடிஸாவில் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை அந்த சிறுமியின் தந்தை அடித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஸா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றைய தினம் கட்டட வேலைகள் நடந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது இளைஞர் பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமை அவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்தி கொண்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. […]

You May Like