சென்னை வண்டலூர் பகுதி இரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்று நடைமேடையில் ஏற முயற்சித்த கல்லூரி மாணவி, மீது ரயில் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவியான சோனியா (19) தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சென்றிருந்தார். அவர்களுடன் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது வண்டலூர் இரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தில் குறுக்கே நடந்து சென்று நடைமேடையில் ஏறலாம் என்று முயற்சித்துள்ளார்.
சோனியா உயரம் குறைவாக இருந்த நிலையில் அவரால் நடைமேடை ஏற முடியாமல் , தண்டவாளத்தில் மீது நடந்து சென்றிருக்கிறார். அச்சமயத்தில் அங்கு திடீரென வந்த இரயில் மோதியது. அதில் சோனியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவல் அறிந்த இரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.