மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது..
ராஜு ஸ்ரீவஸ்தவா ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் ஆவார், அவர் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்ச், காமெடி சர்க்கஸ், தி கபில் சர்மா ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.. மைனே பியார் கியா, தேசாப், பாசிகர் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நகைச்சுவை நடிகராக அவர் நடித்துள்ளார்.. சமீபத்தில் இந்தியாவின் சிரிப்பு சாம்பியன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. அவர் தற்போது ஆபத்தான நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்..
எனினும் அவர் இன்னும் சுயநினைவின்றி இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். அவர் மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாரடைப்பின் போது, ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டது என்றும். தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்..
ராஜு ஸ்ரீவஸ்தவாவுக்கு தற்போது டாக்டர் நிதிஷ் நியாயின் தலைமையிலான இதயவியல் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் எய்ம்ஸ் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரின் இதயத்தை புத்துயிர் அளிக்க இரண்டு முறை CPR வழங்கப்பட்டது. அவர் புத்துயிர் பெற்று தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்.