காற்றின் தரம் குறித்த புகார்களை ஒழுங்குபடுத்தவும் நிவர்த்தி செய்யவும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு டிபிசிசிக்கு சிஏக்யூஎம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி தேசிய தலைநகர் பிராந்தியம் (என்.சி.ஆர்) மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள காற்று தர மேலாண்மை ஆணையம், இன்று இந்த பிராந்தியத்திற்குட்பட்ட மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் / டெல்லி மாசுக்கட்டுப்பாட்டுக் குழுவிற்கு (டிபிசிசி) காற்றின் தரம் தொடர்பான பொதுமக்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஒழுங்குபடுத்தவும் ஒருங்கிணைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் என்.சி.ஆர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் / டி.பி.சி.சி ஆகியவை தத்தமது சமூக ஊடக தளங்களில் பொதுமக்களின் புகார்களைப் பெற்றவுடன், சம்பந்தப்பட்ட செயல்படுத்தும் முகமைக்கு அவற்றை ஒதுக்குவதோடு, புகாரை அனுப்புவதற்காக குறியிடப்பட்ட சி.ஏ.க்யூ.எம் அதிகாரி மற்றும் சிபிசிபி-ஐ டேக் செய்வதன் மூலம் இணக்கம் அல்லது இணக்கமின்மைக்கான காரணத்தை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
இந்த நடவடிக்கை, அத்தகைய புகார்களை நிவர்த்தி செய்வதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பதில் நேரம் மற்றும் செயல்திறனைக் கண்காணிக்க ஆணையத்திற்கு உதவும். என்.சி.ஆர் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் டி.பி.சி.சி அத்தகைய வழிமுறை குறித்து சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு வழிகளில் பரவலான விளம்பரம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.