fbpx

காரமான உணவுகளை உட்கொள்கிறீர்களா?… மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்!… இந்த ஆரோக்கிய மூலிகை பானம் கட்டாயம்!

காரமான உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் செரிமான கோளாறு பிரச்சனையை சரிசெய்ய பயன்படும் ஆரோக்கிய மூலிகை பானம் எப்படி தயாரிப்பது குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.

அதிக காரமான உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி மற்றும் வாயு பிரச்சனை உள்ளிட்ட செரிமான கோளாறுகள் ஏற்படும். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளித்து சரி செய்யவில்லை எனில் நாளடைவில் அவை மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே செரிமான கோளாறு பிரச்சனையை தடுக்கவும் செரிமானத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான மூலிகை பானங்களை பருகலாம். இந்த மூலிகை பானத்தை வீட்டிலேயே மிகவும் எளிதான முறையில் எவ்வாறு தயார் செய்வது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

ஆரோக்கிய மூலிகை பானத்திற்கு தேவையான பொருட்கள்:தண்ணீர் – 2 கப், கருவேப்பிலை இலைகள் – 10, கற்பூரவள்ளி இலைகள் – 3, காய்ந்த கொத்தமல்லி – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், ஏலக்காய் – 1, நறுக்கிய இஞ்சி – 1 இன்ச். செய்முறை: பாத்திரத்தை எடுத்து, அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி அடுப்பின் தீயை மிதமான அளவில் வைக்க வேண்டும். இதையடுத்து, கருவேப்பிலை, கற்பூரவள்ளி இலைகள், காய்ந்த கொத்தமல்லி, சீரகம், ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை நீரில் சேர்த்து, கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பின் தீயை முழுவதுமாக குறைத்து பாத்திரத்தை மூடி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, மேலும் ஐந்து நிமிடங்களுக்கு பாத்திரத்தை திறக்காமல் அப்படியே வைக்க வேண்டும்.
பிறகு பாத்திரத்தில் உள்ள நீரை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து மூலிகை பானத்தின் சுவையை அதிகரித்துக் கொள்ளலாம்.

Kokila

Next Post

வெயில் கால சரும பராமரிப்பு!.... இயற்கை மாய்ஸ்சுரைசர் தயாரிப்பது எப்படி?... அறிந்துகொள்வோம்!

Sun Mar 5 , 2023
வெயில்காலத்தில் சருமத்தை பராமரிக்க வீட்டிலேயே இயற்கை மாய்ஸ்சுரைசர் தயாரிப்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெயில் காலத்தில் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல், சருமத்தை பராமரிப்பதும் அதே அளவு முக்கியம். சருமம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியாகவும் எப்போதும் இருக்க வேண்டும் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பு..இருந்தப்போதும் பலருக்கு தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக சருமம் சிலருக்கு எண்ணெய் பிசுபிசுப்புடன் அல்லது வறண்டு காணப்படும். எனவே வீட்டில் உள்ள […]

You May Like