fbpx

சர்ச்சை கருத்து..!! பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா..!! அடுத்த தலைவர் இவரா..?

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் சர்மா, தனது ராஜினாமா செய்ததை அடுத்து தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறிய கருத்து சர்ச்சையானதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனியார் செய்தி தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆப்ரேசனில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாடுவார்கள் என சேத்தன் சர்மா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தை ஜெய் ஷாவும் ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது புதிய தேர்வுக்குழு தலைவராக நியமிக்க, அக்குழுவில் உள்ள வீரர்களுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், சலில் அங்கோலா அல்லது சிவ சுந்தர் ஆகியோருக்கு பொறுப்பு வழங்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தேர்வு குழு உறுப்பினர்களாக சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் மற்றும் சிவசுந்தர் தாஸ் ஆகியோர் உள்ளனர்.

Chella

Next Post

பாக்கியலட்சுமி மீது புகார் தெரிவித்த அமிர்தா…….!

Fri Feb 17 , 2023
விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி கோபியை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறார் பாக்கியலட்சுமி.அந்த சமயத்தில் தாத்தா அவருடைய மொத்த சொத்தையும் எழுதி வைத்து விடுவதாக தெரிவித்து அதற்கு பதிலாக வீட்டை மட்டும் கொடுத்து விடுமாறு கோபியிடம் கேட்கிறார், இதற்கு கோபியும் சம்மதம் தெரிவிக்கிறார். அடுத்தடுத்து வரும் நாட்களில் பாக்கியலட்சுமி மற்றும் அமிர்தா உள்ளிட்டோர் இணைந்து ஒரு திருமணத்திற்கு சமையல் ஒப்பந்தம் எடுத்து செய்வதை போல காட்சிகள் வருகிறது. அதன் படப்பிடிப்பில் […]

You May Like