ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருந்த கூக்குவித்து கோமாளி சீசன் 4 தற்சமயம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வி.ஜே விஷால், விசித்திரா, ஷெரின், காளையன், ராஜ் ஐயப்பா,ஸ்ருஷ்டி போன்ற திரை உலக பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று கொண்டுள்ளனர்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் இருந்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் வெளியேறி விட்டார். இந்த நிலையில், இந்த வாரம் நடைபெற்றுள்ள குக் வித் கோமாளி எலிமினேஷன் சுற்றிலிருந்து வெளியேறப் போவது யார்? வி.ஜே. விஷால் அல்லது மைம் கோபி இருவரில் ஒருவர்தான் வெளியேறப் போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து இருவருமே வெளியேறவில்லை இருவரும் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இறுதிக்கட்டத்தில் மோதிக்கொண்ட இருவரும் நடுவர்களின் பாராட்டை பெற்று நல்ல உணவுகளை வழங்கியதால் இருவருமே காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலமாக இந்த வாரம் யாரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறவில்லை.