fbpx

ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் கொத்தமல்லி டீ!… நோய் எதிர்ப்பு முதல் தோல் பிரச்சனை வரை அனைத்துக்கும் தீர்வு!…

கொத்தமல்லி டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன், தோல் பிரச்சனைகள் நீங்கும். இதுதவிர இன்னும் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.

கொத்தமல்லியில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-கே, வைட்டமின்-சி, வைட்டமின்-ஈ அதிகளவில் உள்ளன. கூடுதலாக, இரும்பு, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகளும் உள்ளன. கொத்தமல்லியை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீ குடித்தால், பல பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. கொத்தமல்லி டீ சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது. இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே இதனை உட்கொள்வது சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் மாற்றுகிறது.

கொத்தமல்லி தண்ணீரில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன. எனவே, அதன் நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது எந்த வகையான வைரஸ் தொற்றையும் தவிர்க்க உதவும். எடை இழப்புக்கு கொத்தமல்லி டீ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டீ வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் பல கூறுகள் உள்ளன. இதன் விளைவாக, உடலில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது. கொத்தமல்லி டீ வயிற்றுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினமும் காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி டீயை உட்கொள்வது செரிமானத்தை பலப்படுத்துகிறது.

மலச்சிக்கல் நீங்கும். கொலஸ்ட்ரால் குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், மாதவிடாய் பிரச்சனை இருக்கும் பெண்களும் காலையில் கொத்தமல்லி டீயை பருகலாம். அவர்களுக்கு இந்தப் பிரச்சசனையில் இருந்து விடுபட வழி கிடைக்கும். மேலும், கொத்தமல்லி டீ உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.

Kokila

Next Post

முட்டைக்கோஸ் சாற்றில் இத்தனை நன்மைகளா?... முட்டைக்கோஸ் ஜூஸ் தயாரிக்கும் முறை இதோ!...

Thu Mar 16 , 2023
முட்டைக்கோஸ் ஜூஸ் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம் முட்டைக்கோஸை பொரியல், குழம்புகளில் சேர்த்து உட்கொள்வோம். இதனால் வாயு தொல்லை ஏற்படும் என்பதால் பலர் இதனை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் இந்த முட்டைகோஸில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பல சத்துக்கள் உள்ளது. அதே சமயம், முட்டைக்கோஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், […]

You May Like