fbpx

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா..! விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு..?

தேனியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் சில மாணவர்களுக்கு கடந்த 2 நாட்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதையடுத்து, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 12 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 170 மாணவர்கள் படிக்கும் பள்ளியில் முதற்கட்டமாக 72 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மேலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 9 மாணவர்களின் பெற்றோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா..! விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு..?

இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 12 வயதிற்குட்பட்டவர்கள், மாணவர்களுக்கு தீவிர பாதிப்பு இல்லாததால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி வளாகம் மற்றும் தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வீடுகளின் சுகாதாரத்துறையினரால் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

“ பழிவாங்குறத நிறுத்திட்டு, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்க..” இபிஎஸ் ட்வீட்..

Fri Jul 8 , 2022
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு, திமுக அரசு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ்.. இவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. இந்த விசாரணையின் போது 2015 முதல் 2021 வரை அவர் அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் […]
பொது இடத்தில் விவாதிக்க தயாரா..? முதல்வர் முக.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்..!!

You May Like