தற்போது உள்ள காலகட்டத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். சர்க்கரை நோய் பொதுவாக ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதித்துவிடுகிறது. அது மட்டும் இல்லாமல் சர்க்கரை நோய் வந்துவிட்டால் இனிப்பு சாப்பிட முடியாமல் போய்விடும் என்பது பலரின் கவலையாக உள்ளது. இதனால் இந்த நோயில் இருந்து தப்பிக்க பலர் பல முயற்சிகளை செய்கின்றனர். உணவு கட்டுப்பாடு,உடல் பயிற்சி இது போன்ற பல முயற்சிகள் எடுப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது தான்.
அதே சமயம், திருமணமான அல்லது உங்களுக்குப் பிடித்த காதல் உறவுகளுடன் சேர்ந்து வாழ்வதால் நீரழிவு நோயைத் தடுக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா??? ஆம், சமீபத்தில் நீரழிவு நோய் மற்றும் திருமண உறவுகள் குறித்த ஆய்வு ஒன்றை லக்சம்பர்க் பல்கலைக்கழகம் மற்றும் கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகம் நடத்தியது.ஆய்வின் முடிவில், 50 வயது முதல் 89 வயதிற்கு உட்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நீரழிவு நோய் இல்லை என்றும், அதில் 76 சதவீதம் பேர் திருமணமானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, சர்க்கரை நோய்க்கும், உறவுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சி நடத்தியதில், கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தால் நீரழிவு நோயை தடுக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது..