fbpx

பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்..! உச்சநீதிமன்றத்தை நாடும் ஸ்ரீமதியின் பெற்றோர்?

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய உத்தரவை எதிர்த்து ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், கைதான பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 பேரும் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளித் தாளாளர் உள்பட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 26ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் ஆசிரியைகள் இரண்டு பேரும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்துள்ளது.

பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்..! உச்சநீதிமன்றத்தை நாடும் ஸ்ரீமதியின் பெற்றோர்?

மேலும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜிப்மர் மருத்துவக்குழுவின் ஆய்வறிக்கையின் படி பாலியல் வன்கொடுமையோ, கொலையோ செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மாணவர்களை படிக்குமாறு ஆசிரியர்கள் கூறுவது தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல எனவும், மாணவியின் தற்கொலை கடிதத்தின்படி யாரும் தற்கொலைக்கு தூண்டியதாக கூறவில்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், மாணவி மரண வழக்கில் ஸ்ரீமதியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், ஸ்ரீமதி மரணம் குறித்து ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துக்களை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Chella

Next Post

11-வது முறையாக ஒரே நாளில் திரையரங்கில் மோதும் விஜய் - அஜித் படங்கள்..? ரசிகர்கள் உற்சாகம்..!

Tue Aug 30 , 2022
அஜித் மற்றும் விஜய் இருவரின் படங்களும் 11-வது முறையாக மீண்டும் திரையில் மோதவுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் பண்டிகை நாள் என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் என்பது எழுதப்படாத விதியாகும். நம் தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களுக்கு பஞ்சமில்லாததால் அவ்வப்போது இரு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒருநாளில் வெளியாவது எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திலிருந்தே நடந்து வருகிறது. அந்த வரிசையில் தமிழில் முன்னணி நடிகர்களாக வலம் […]
ஓடிடி-யிலும் ஒரே நாளில் வெளியாகும் வாரிசு, துணிவு..? எப்போது தெரியுமா..?

You May Like