fbpx

”இங்கிருந்துதான் கோவிட் பரவியிருக்க கூடும்”..!! ஆராய்ச்சிகளுக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா..!!

முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுஹான் நகரில் உள்ள வுஹான் கல்வி நிறுவனத்திற்கான நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களை வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி ஆய்வகம் வழங்கத் தவறியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் தொடங்கிய மறுஆய்வுக்குப் பிறகு, நிதியுதவியை நிரந்தரமாக நிறுத்த முயல்வதாக அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது. வுஹானில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி, அமெரிக்க கூட்டாட்சி விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஆராய்ச்சிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும்.

ஜூலை 2020 முதலே இந்த ஆய்வகத்திற்கு அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்திடம் இருந்து எந்த வகையான நிதியுதவியும் அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. கொரோனாவின் தோற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், சீனாவின் பயோ-ஆராய்ச்சிகளுக்கு எதிராக அமெரிக்கா எடுத்திருக்கும் மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். கொரோனா பரவ தொடங்கிய காலகட்டத்தில், இந்த வுஹான் கல்வி நிறுவனத்தில் இருந்து தான் அது பரவி இருக்க வேண்டும் என்று பலதரப்பினரும் கூறினர்.

ஆனால், இதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கொரோனா மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கியதா? அல்லது ஆய்வங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மூலம் பரவ தொடங்கியதா? என்பதை பல நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. இதற்கிடையில், சீனா வேண்டுமென்றே இந்த வைரஸை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Chella

Next Post

”நாடாளுமன்றத்தின் புதிய ஆடைகளை இனி அணிய மாட்டோம்”..!! பணியாளர்கள் எடுத்த திடீர் முடிவு..!!

Thu Sep 21 , 2023
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தாமரை அச்சிடப்பட்ட சீருடை வழங்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. முதல் நாள் பழைய நாடாளுமன்றத்திலும், அதைத்தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்திலும் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புதிய கட்டிடத்திற்கு மாறுவதையொட்டி அங்கு பணிபுரியம் ஊழியர்களுக்கு தாமரை அச்சிடப்பட்ட சீருடை வழங்கப்பட்டது. இதனை தேசிய ஆடை அலங்கார தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைத்துள்ளது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு […]

You May Like