fbpx

Crime | கள்ளக்காதலனுக்காக அக்கா புருஷனை அடியோடு வெட்டி சாய்த்த மச்சினிச்சி..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ளது புங்கம்பாடி பாரவலசு என்ற பகுதி. இங்கு வசித்து வருபவர் பழனிசாமி (72). இவரது மனைவிக்கு குழந்தை பிறக்காததால், கடந்த 25 ஆண்டுக்கு முன்பு மரகதம் என்பவரை பழனிசாமி இரண்வாது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 20ஆம் தேதி பழனிசாமியை யாரோ கொன்றுவிட்டார்கள். உடம்பெல்லாம் ரத்த காயங்கள் கொடூரமாக வெட்டுப்பட்டு காணப்பட்டன. அத்துடன் பழனிசாமியின் சடலத்தையும் தீவைத்து எரித்துள்ளனர். இதைப்பார்த்து பதறிப்போன மரகதம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசாரும் விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர்.

அரிவாளால் வெட்டி, அதற்கு பிறகு உடலுக்கு தீவைத்தது விசாரணையில் தெரியவந்தது. பிறகு, பழனிசாமி மனைவியின் சகோதரியான ஈரோடு முருங்ககாட்டு வலசை சேர்ந்த மாசிலாமணியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மச்சினிச்சி மாசிலாமணி வசமாக சிக்கினார். மாசிலாமணிக்கு 35 வயதாகிறது. இவர் வீட்டிற்கு அருகே, தமிழன் (36) என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். மாசிலாமணியும், தமிழனும், ஒன்றாக நூல் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

தமிழனுக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. எனவே, மாசிலாமணி தன்னுடைய மகளுக்காக வைத்திருந்த 10 பவுன் நகையையும், பணத்தையும், தமிழனுக்கு தந்து உதவியுள்ளார். இதற்கு நடுவில், மாசிலாமணிக்கு மஞ்சள் நீராட்டு விழா செய்வதற்காக, கள்ளக்காதலனிடம் கடனாக கொடுத்த நகை, பணத்தை கேட்டுள்ளார். ஆனால், உடனடியாக பணம், நகையை தர முடியாது என்று சொல்லிவிட்டார். எனவே, பணமில்லாமல் பூப்புனித விழாவை நடத்த முடியாமல் அவதிப்பட்டார் மாசிலாமணி. இந்த விழாவை, இன்னொரு நாளைக்கு தள்ளிவைக்கவும் முடியவில்லை. குடும்பத்தில் உள்ள நெருங்கிய உறவினர்கள், யாராவது இறந்துவிட்டால் எப்படியும் சுபகாரியத்தை நடத்த முடியாது என்பதால், யாரையாது கொன்றுவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார் மாசிலாமணி.

இந்த பூப்புனித விழாவை தள்ளிப்போடுவதற்காகவும், நகை மீட்டு தருவதற்கு கள்ளக்காதலனுக்கு டைம் தர வேண்டும் என்பதற்காகவும், தன்னுடைய அக்கா வீட்டுக்காரர் பழனிசாமியை கொலை செய்ய முடிவெடுத்தார் மாசிலாமணி. தன்னுடைய 17 வயது மகனையும், கள்ளக்காதலன் தமிழனையும், இந்த கொலையில் ஈடுபடுத்தி கொண்டார். கடந்த 19ஆம் தேதி இரவு, வீட்டிற்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமியை அரிவாளாலேயே வெட்டி சாய்த்துள்ளனர். பிறகு, உடலை தீயிட்டு எரித்துள்ளனர். இவ்வளவும் விசாரணையில் மாசிலாமணி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மாசிலாமணியின் 17 வயது மகன் உட்பட கள்ளக்காதல் ஜோடியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீஸ். கள்ளக்காதலனிடம் கொடுத்த நகைகளை மறைப்பதற்காக, மாமாவை கொன்ற இந்த பாசக்கார மச்சினிச்சியை கண்டு ஈரோடே அதிர்ந்து போயுள்ளது.

Read More : மே மாதம் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது தெரியுமா..? வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!!

Chella

Next Post

வெயிலை சமாளிக்க சுழற்சி முறையில் வேலை..!! தொழிலாளர்களுக்கு தேவையான வசதியை செய்து கொடுங்க..!! அதிரடி உத்தரவு..!!

Fri Apr 26 , 2024
கோடை காலத்தில் வெப்ப நிலை அதிகமாக இருப்பதால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர்போக்கு அதிகமாக இருக்கும். அதிகமான நீர்போக்கினால் உடல் சோர்வு ஏற்படும். மேலும், உடலில் போதுமான நீர் இல்லாமல் போவதால் மயக்கம், அஜீரணம், மற்றும் சரும பிரச்சனைகள் வரக்கூடும். இதனை தடுக்க நீர் மற்றும் சரியான உணவுகள் அருந்துவது அவசியம். எங்குச் சென்றாலும் குடிநீர் கையில் வைத்துக்கொள்வது அவசியம். எவ்வளவு தண்ணீர் அருந்துகிறோமோ உடல் நிலை அவ்வளவு […]

You May Like