fbpx

சிஆர்பிஎஃப் தேர்வு!… தமிழ் உட்பட் 13 மொழிகளில் எழுதலாம்!… மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

சிஆர்பிஎஃப் தேர்வு எழுதுவோர் தற்போது தமிழ் உட்பட 13 பிராந்திய மொழிகளில் தங்கள் தேர்வுகளை எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையான சிஆர்பிஎஃப் (CRBF) படையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அண்மையில் அறிவிப்பு வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பமானது, கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கியது. இறுதிநாள் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிஆர்பிஎப் படையில் மொத்தமுள்ள 9,212 காலிப்பணி இடங்களில், 579 பணியிடங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சிஆர்பிஎப் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன.

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து கடிதம் எழுதி இருந்தார். அதில், தமிழ்நாட்டில் இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர், சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய் மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது என கூறி அந்தந்த மாநிலங்களின் பிராந்திய மொழிகளில் தேர்வை நடத்துமாறு குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில், சிஆர்பிஎப் தேர்வு எழுதும் தேர்வர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமல்லாது 13 மாநில பிராந்திய மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆங்கிலம்,, இந்தி உட்பட, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, ஓடிஸ், உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் இந்த தேர்வை எழுதலாம் என்றும் ஜனவரி 1,2024 முதல் இந்த தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

அந்த நாயை புடிச்சு ஜெயில போடுங்க சார்!... ஆந்திர முதல்வரின் போஸ்டரை கிழித்த நாய்மீது போலீஸில் புகார்!

Sun Apr 16 , 2023
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் போஸ்டரை கிழித்த நாய் மீது வினோதமான சம்பவத்தில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வீட்டுச் சுவரில் இருந்த முதலமைச்சரின் போஸ்டரை நாய் கிழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, பெண்கள் குழு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது.எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தொழிலாளி என்று தாசரி உதயஸ்ரீ கேலியாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் சில பெண்களுடன் சேர்ந்து, […]

You May Like