இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அதிக அளவில் விநியோகம் செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியாவை பின்னுக்கு தள்ளி சவுதி அரேபியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிக அளவில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ததில் ஈராக் முதல் இடத்தைத் பிடித்துள்ளது.
உலகிலேயே மூன்றாவதாக பெரிய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, கடந்த மாதம் சவுதி அரேபியாவில் இருந்து ஒரு நாளைக்கு 8 லட்சத்து 63 ஆயிரத்து 950 பேரல்கள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து உள்ளது.
இது முந்தைய மாதத்தை விட 4.8 சதவீதம் அதிகமாகும். அதே நேரத்தில் ரஷியாவிலிருந்து இந்தியாவுக்கு கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு 2.4% குறைந்து 8 லட்சத்து 55 ஆயிரத்து 950 பேரல்களாக இருக்கிறது.