நடிகை கீர்த்தி சுரேஷ் அரசியலுக்கு வருவதாகவும் அவர் ஒரு குறிப்பிட்ட கட்சியில் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
80-களின் புகழ்பெற்ற நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இவர் பைரவா படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து சர்கார், சாமி 2, சண்டக்கோழி 2 என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். இவர் நடித்த மகாநடி என்ற படம் பெரிய ஹிட் கொடுத்தது. கீர்த்தி சுரேஷ் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் நடிக்கும் பல படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் ஆவதில்லை. ஆனால், அவர் யாருடன் ஹீரோவாக நடித்தாலும் அந்த படம் ஹிட்டாகிறது. உதயநிதி ஸ்டாலினுடன் அவர் அண்மையில் நடித்த ’மாமன்னன்’ படம் வரும் 29ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு அடிபடுகிறது. மாமன்னன் பட புரமோஷன்களில் கலந்து கொண்ட கீர்த்தியை சுற்றி பல்வேறு வதந்திகள் உலா வருகின்றன. அதில் அவர் பாஜகவில் இணையலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவலை அவருடைய தாய் மேனகா மறுத்துள்ளார். இந்நிலையில்தான் அவர் திமுகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதயநிதி ஸ்டாலின் மீதுள்ள மரியாதை, அன்பு காரணமாக கீர்த்தி சுரேஷ் திமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் வதந்தி கிளம்பியுள்ளது. சினிமா புகழ் மற்றும் உதயநிதியின் நட்பு காரணமாக அவர் திமுகவில் இணைய அழைக்கப்பட்டார் என்கிறார்கள். ஏற்கனவே பாஜகவில் கீர்த்தி சுரேஷ் இணைவதாக வெளியான தகவலை அவருடைய தாய் மறுத்த நிலையில், திமுகவில் இணைய போவதாக வரும் தகவல்களை யார் மறுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிறைய ஹீரோயின்கள் தமிழ் சினிமாவில் இருக்கும் போது எதற்காக கீர்த்தி சுரேஷ் அரசியலுக்கு வருகிறார் என்றும் திமுகவில் இணைகிறார் என்பதையும் பிரபலப்படுத்த வேண்டும் என சிலர் கேட்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷுக்கு அரசியல் மீது ஆர்வம் அதிகம் இருப்பதால்தான் அவர் மீது இது போன்ற கருத்துகள் வருகின்றன என்கிறார்கள். இதனால்தான் இந்த செய்திகள் பரவுவதாகவும் கூறுகிறார்கள். மாமன்னன் படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மகாநடி படத்தில் நடித்தமைக்கு ஆந்திராவில் உள்ள அரசியல் கட்சியினர் பாராட்டு தெரிவித்த போது கீர்த்தி புதிய கட்சியை தொடங்குவார் என வதந்தி பரவியது. எனவே, திமுகவில் இணைவார் என சொல்லப்படும் தகவல் உண்மையா அல்லது வதந்தியா என அவரே தெளிவுப்படுத்தினால்தான் உண்மை தெரியும்.