தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்றைய தினம் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில், ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோர பகுதிகளிலும், குமரிக்கடலும் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Read More : நீங்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவரா..? மாதந்தோறும் வருமானம் வேண்டுமா..? அப்படினா இதை பண்ணுங்க..!!