fbpx

மருமகளை கற்பழித்த மாமனார்; நள்ளிரவில் நடந்த கொடூரம்..

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் 65 வயதான ராஜி. விவசாயம் செய்து வரும் இவர், தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.
இவருக்கு ஜெயப்பிரகாஷ் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மருமகளும் உள்ளனர். இந்த தம்பதி, தங்களின் இரண்டு குழந்தைகளுடன் திருச்செங்கோட்டில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, திருச்செங்கோட்டில் எக்ஸ்பிரஸ் கொரியர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த புவனேஸ்வரி, சங்ககிரியில் உள்ள அவரது தாயார் வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

பின்னர், கடந்த 21ம் தேதி ரேசன் பொருள் வாங்குவதற்காக வெட்டுக்காட்டிலுள்ள தனது மாமியார் வீட்டிற்க்கு சென்று, இரவு அங்கேயே தங்கியுள்ளார். நள்ளிரவில், மருமகள் தூங்கும் அறைக்கு அவரது மாமனார் ராஜி சென்றுள்ளார். இதையடுத்து, அவர் தனது மருமகள் புவனேஸ்வரியை பாலியியல் தொந்தரவு செய்து கற்பழித்துள்ளார். இதனால்
பெரும் அதிர்ச்சி அடைந்த மருமகள் புவனேஸ்வரி, தனக்கு நடந்த கொடுமைகளை குறித்து தனது தாய் மற்றும் கணவரிடம் கூறி அழுதுள்ளார். மேலும், நடந்த சம்பவம் குறித்து, கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் கொங்கணாபுரம் போலீசார் மாமனார் ராஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: குளிர்காலத்தில், குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..

English Summary

daughter-in-law-was-raped-by-her-father-in-law

Next Post

2025 டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி..!

Fri Nov 29 , 2024
2025 Delhi assembly election Congress party alone contest..!

You May Like