விளையாட்டு ஒரு விளையாட்டான விஷயம் அல்ல.. அது ஒரு ஒழுக்கத்தின் ஆரம்பப்புள்ளி, சமுதாயத்தின் நாகரீக வளச்சிக்கு வித்திடும் ஆரம்ப எழுத்து, உடலுக்கும் மனதுக்கும் உறுதி தரும் அருமருந்து, விடாமுயற்சிக்கு ஒரு சீறிய எடுத்துக்காட்டு. இந்தியாவில் விளையாட்டுக்காக ராஜிவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, துரோச்சார்யா போன்ற உயரிய விருதுகள் வழங்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் சிறப்பிக்கப்படுகின்றனர்.
ஹாக்கியின் அடையாளம் தயான் சந்த்
1905ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இந்தியாவின் அலகாபாதில் பிறந்தவர் தான் தயான் சந்த். இளமை காலம் முதலே அவர் மேற்கொண்ட சீறிய பயிர்ச்சியாளும், கடுமையான உழைப்பாலும், இந்தியாவில் மட்டுமள்லாமல் அகில உலகத்திலேயே ஹாக்கிக்கான ஒரு அடையாளமாக திகழ்ந்தார். விளையாட்டு துறையில் தயான் சந்த்-ன் பங்களிப்பு இன்றியமையாதது, அதனாலேயே அவரது பிறந்தநாளை தேசிய விளையாட்டுக்கான தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
ஆரம்பக்காலத்தில் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றிய தியான் சந்த், ஆம்ஸ்டர்டாமின் 1928ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ், லாஸ் ஏஞ்சலஸின் 1932ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ், பெர்லினின் 1936ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் இந்தியாவுக்கு தங்க பதக்கம் வாங்கிகொடுத்தார். சரியாக பந்துகளை கையாண்டு, கோலை துள்ளியமாக சொல்லி அடிப்பவராக திகழ்ந்ததால், உலகளவில் அவர் “THE WIZARD OF HOCKEY” என அழைக்கப்படடுகிறார். அவரது ஈடுப்படு அவரை இந்தியாவின் எல்லைகளை தாண்டி மின்னச்செய்தது.
1935ம் ஆண்டு BRITISH HOCKEY LEAGUEல் அவர் விளையாட வேண்டுமென அந்நாட்டு அரசால் வேண்டுகோள் விடுக்கப்பட்டு விளையாட்டி, ஆட்டத்தை காண வந்த ரசிகர்களின் பார்வையை ஆட்டிபடைத்தார். 1956ம் ஆண்டில் இந்தியவின் உயரிய விருதுகளில் ஒன்றான, பத்ம பூஷன் விருது பெற்ற தயான் சந்த், 1979ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, தனது 74ம் வயதில் நிறையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, IIT டெல்லியில் காலமானார்.
எவ்வளவு தான் பேரும் புகழும் கிடைத்தாலும், மடை மாராமல் மின்னியதால் இன்று வரை இந்தியா மட்டுமின்றி அகில உலக விளையாட்டு வீரர்களின் ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாக திகழ்கிறார் மேஜர் தயான் சந்த். அவரது பிறந்தநாளான இன்றைய தேசிய விளையாட்டு தினத்தில் அவரை நினைவுகூறுவோம், நம்மால் முடிந்த வரை விளையாடி நமது உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வோம்.
Read more ; விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்… ஓராண்டுக்கு NASA கொடுக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?