fbpx

கடன் தொல்லை!… அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!… மகள் கண்முன்னே நிகழ்ந்த துயரம்!

தெலுங்கானா மாநில கல்வித்துறை அமைச்சர் சபிதா இந்திராரெட்டி உள்ளார். இவரின் பாதுகாப்பு அதிகாரி பைசல் அலி. இவர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பைசல்அலி தனது குடும்ப செலவுக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தார். இத்துடன் லோன் ஆப் மூலமும் பல லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் இவரை வீடு தேடி சென்றும், அடிக்கடி போன் செய்தும் கடனை திருப்பி செலுத்தும்படியும் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் பைசல்அலி கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அமைச்சரின் பாதுகாப்புக்கு பணிக்காக சீருடையில் சென்றார். இவர் வீட்டிலிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் பைசல்அலியின் வீட்டுக்கு சென்று கடனை திருப்பி கேட்டதாகவும் அவரது மனைவியும் மகளும் பைசல் அலி பணிக்கு சென்றுவிட்டதாக கூறியதாகவும் தெரிகிறது. தந்தையை தேடி நிதி நிறுவனத்தினர் வந்தது குறித்து தெரிவிக்க அவரது மகள் அமைச்சரின் வீட்டுக்கு சென்றார்.

அந்த சமயத்தில் பைசல்அலி, அமைச்சரின் வீட்டருகே உள்ள டீ கடையில் தேநீர் குடித்து கொண்டிருந்தார். உடனே டீக்கடைக்கு வந்த பைசல் அலி மகள் தனது தந்தையிடம் கடன்காரர்கள் காலையிலேயே வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்வதாக கூறினார். ஏற்கனவே கடும் மன உளைச்சலில் இருந்த பைசல்அலி, எதிர்பாராத வகையில் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனது மகள் கண்முன்னே தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி, நடந்ததை கேட்டறிந்து, அவரது மகளுக்கு ஆறுதல் கூறினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், பைசல்அலி கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். தனது மகளின் கண்முன் யாரும் எதிர்பாராமல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Kokila

Next Post

வேலை தேடும் நபர்களா நீங்கள்...? TVS நிறுவனம் வெளியிட்ட வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு...!

Mon Nov 6 , 2023
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Digital Product Owner பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 13 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். […]

You May Like